/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால் மீது தி.மு.க., அலுவலகம் அகற்ற சென்ற அதிகாரிக்கு மிரட்டல்
/
வடிகால் மீது தி.மு.க., அலுவலகம் அகற்ற சென்ற அதிகாரிக்கு மிரட்டல்
வடிகால் மீது தி.மு.க., அலுவலகம் அகற்ற சென்ற அதிகாரிக்கு மிரட்டல்
வடிகால் மீது தி.மு.க., அலுவலகம் அகற்ற சென்ற அதிகாரிக்கு மிரட்டல்
ADDED : டிச 29, 2024 12:33 AM

கண்ணகிநகர், கண்ணகி நகரில் வடிகாலை ஆக்கிரமித்து, தி.மு.க..வின் தென்சென்னை மாவட்ட பிரதிநிதி அருள், கட்சி அலுவலகம் கட்டினார். இதனால், அடைப்பு அகற்றம், சீரமைப்பு பணி செய்வதில் இடையூறு ஏற்பட்டது.
எனவே, கட்சி அலுவலகத்தை அகற்றக்கோரி, அப்பகுதிவாசிகள் மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்தனர். நேற்று முன்தினம், வார்டு பொறியாளர் கலாவதி, உதவி செயற்பொறியாளர் மூர்த்தி ஆகியோர், ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றனர். அப்போது, தொண்டர்களுடன் வந்த அருள், கட்டடத்தை அகற்ற விடாமல் இடையூறு செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி, கலாவதியின் மொபைல் போனை பறித்து, அவரை ஒருமையில் பேசி தள்ளி விட்டுள்ளார்.
இதில் கீழே விழுந்த கலாவதிக்கு, லேசான காயம் ஏற்பட்டது. திடீரென குவிந்த அருளின் ஆதரவாளர்கள், கலாவதியை சூழ்ந்து தாக்க முயன்றனர். உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, இடையில் புகுந்து பேசி கலாவதியை மீட்டார்.
தொடர்ந்து, 'அலுவலகத்தை இடித்தால் கொலை செய்துவிடுவேன்' என, மிரட்டல் விடுத்த அருள், அங்கிருந்து ஆதரவாளர்களுடன் சென்றார். கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.