/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய தி.மு.க.,வினரால் சலசலப்பு
/
பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய தி.மு.க.,வினரால் சலசலப்பு
பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய தி.மு.க.,வினரால் சலசலப்பு
பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய தி.மு.க.,வினரால் சலசலப்பு
UPDATED : டிச 30, 2025 07:01 AM
ADDED : டிச 30, 2025 05:46 AM

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டையில், பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய தி.மு.க.,வினர், தட்டிக்கேட்ட பெண் பயணிக்கும் மிரட்டல் விடுத்த சம்பவம், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
எழும்பூரில் இருந்து திருவொற்றியூர் வரை செல்லும், தடம் எண்: 28 மாநகர பேருந்து, நேற்று முன்தினம், வள்ளலார் நகர் வழியாக சென்றது. அதில் பயணித்த பயணிக்கும், நடத்துநருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, வண்ணாரப்பேட்டை, விஜயராகவலு சாலையில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
பேருந்து நிறுத்தப்பட்ட பகுதியில், எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தி.மு.க.,வின் 52வது வட்டச் செயலர் முருகன், அவரது ஆதரவாளர்களான நிர்வாகி பஞ்சகன் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது பஞ்சகன், 'ஏன் இங்கு பேருந்தை நிறுத்தினீர்கள்' எனக் கேட்டு வாக்குவாதம் செய்தார். இதனால், ஓட்டுநருக்கும் பஞ்சகனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பஞ்சகனும், அவரது ஆதரவாளர்களும், பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துநரை அடித்து உதைத்தனர். இதை பார்த்து பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவர் தட்டிக்கேட்டபோது, அவருக்கும் மிரட்டல் விடுத்தனர்.
இந்த நிலையில், அவ்வழியாக வந்த அனைத்து பேருந்துகளையும் ஓட்டுநர்கள் நிறுத்தவே, போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்த, வண்ணாரப்பேட்டை போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதையடுத்து வட்ட செயலர் முருகன், ஓட்டுநர், நடத்துநரிடம் சமரசம் பேசினார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக வழக்கு ஏதும் கொடுக்கப்படவில்லை.

