/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெரு பெயர் பலகை வைக்கும் பணி மந்தம் தி.மு.க., கவுன்சிலர் ஆட்சேபனை கடிதம்
/
தெரு பெயர் பலகை வைக்கும் பணி மந்தம் தி.மு.க., கவுன்சிலர் ஆட்சேபனை கடிதம்
தெரு பெயர் பலகை வைக்கும் பணி மந்தம் தி.மு.க., கவுன்சிலர் ஆட்சேபனை கடிதம்
தெரு பெயர் பலகை வைக்கும் பணி மந்தம் தி.மு.க., கவுன்சிலர் ஆட்சேபனை கடிதம்
ADDED : ஜன 03, 2025 12:24 AM
பெருங்களத்துார், தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் ஏரி, பீர்க்கன்காரணை ஏரிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பெருங்களத்துார் ஏரிக்கரை அருகே தண்டவாளத்தை ஒட்டி தேங்குகிறது.
அந்த தண்ணீரை மோட்டார் வாயிலாக வெளியேற்றி, தாம்பரம் மாநகராட்சி, 59வது வார்டில் விடுகின்றனர்.
அப்படி விடப்படும் தண்ணீர், டி.டி.கே., நகர், சக்தி நகர், அன்னை இந்திரா நகர், ஹவுசிங் போர்டு ஆகிய பகுதிகளில் உள்ள காலிமனைகளில் தேங்குகிறது.
மழை பெய்யும் போது, இந்த தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்வதால், அப்பகுதிவாசிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இது தொடர்பாக, டி.டி.கே., நகர், அன்னை இந்திரா நகர், சக்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஆட்சேபனை தெரிவித்து, ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், மாநகராட்சி, 4வது மண்டலக்குழு கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க.,வை சேர்ந்த 59வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி, இப்பிரச்னை தொடர்பாகவும், அதற்கு செல்விடப்படும் தொகைக்கும் ஆட்சேபனை தெரிவித்து, மண்டல குழு தலைவரிடம் கடிதம் அளித்தார்.
அதேபோல், மாநகராட்சியில் புதிதாக தெரு பெயர் பலகைகளை வைக்கும் பணி துவங்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும், 59 வார்டுகளில் உள்ள 193 தெருக்களில், 10 சதவீத தெரு பெயர் பலகைகள் கூட வைக்கவில்லை. இதற்கும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

