/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதுப்பட்டு ஊராட்சியில் தலைவியை ஏமாற்றி தி.மு.க., துணை தலைவி ரூ.40 லட்சம் மோசடி குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்

ADDED : நவ 19, 2024 12:20 AM

செங்கல்பட்டு,செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பட்டு ஊராட்சியில், தன் கையெழுத்தை போலியாக போட்டு, தி.மு.க.,வை சேர்ந்த ஊராட்சி துணை தலைவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், 40 லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக, கலெக்டரிடம், இருளர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி தலைவி புகார் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், புதுப்பட்டு ஊராட்சி தலைவர் பதவி, இருளர் சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில், சாந்தி என்பவர் ஊராட்சி தலைவியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஊராட்சியில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், அவர் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் மனமுடைந்த ஊராட்சி தலைவி சாந்தி, நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், செங்கல்பட்டு கலெக்டரிடம் அளித்த மனு:
ஊராட்சி நிர்வாகத்தில், ஊராட்சி செயலர், தி.மு.க.,வைச் சேர்ந்த துணைத்தலைவி மஞ்சுளா, வார்டு உறுப்பினர்கள் சிலர் இணைந்து, போலி பில் தயார் செய்து, என் கையெழுத்தை அவர்களே போட்டு முறைகேடு செய்துள்ளனர்.
தெரு விளக்கு கொள்முதலில் பணம் கையாடல் செய்துள்னளர். நன்கொடையாக பெற்று, இருளர் குடியிருப்பில் மின் விளக்கு வசதி செய்ததற்கு, ஊராட்சியில் செய்ததாக கணக்கு எழுதியுள்ளனர். குடிநீர் வினியோக பணிகள், பிளீச்சிங் பவுடர் வாங்கியது உள்ளிட்டவற்றில், போலி பில் தயாரித்து, பணம் எடுத்துள்னளர்.
கேட்டால் என்னையும், என் ஆதரவு உறுப்பினர்களையும் மிரட்டுகின்றனர். எனக்கு போதிய படிப்பறிவு இல்லாததால், அரசின் திட்டங்கள், வரி வருவாய், ஒப்பந்த பணிகள் உள்ளிட்டவை குறித்து, எனக்கு தெரிவிப்பதில்லை.
ஊராட்சி செலவு குறித்து, என்னிடம் குறைவான தொகையை கூறிவிட்டு, அதிகமாக எழுதி எடுத்துக் கொள்கின்றனர். இருளர் இனத்தை சேர்ந்தவர் என்பதால், என்னை ஒதுக்கி வைக்கின்றனர்.
பல்வேறு பணிகள் வாயிலாக, 40 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. ஊராட்சியில் பணம் கையாடல் குறித்து விசாரித்து, அதற்கு காரணமான அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.