/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் விற்ற டாக்டருக்கு 'காப்பு'
/
போதை பொருள் விற்ற டாக்டருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 11, 2025 12:19 AM

சென்னை, மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்ற வழக்கில், தனியார் காப்பீடு நிறுவன டாக்டர் கைது செய்யப்பட்டார்.
அரும்பாக்கம் வல்லவன் ஹோட்டல் அருகே, மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்ற, சென்னையைச் சேர்ந்த அந்தோணி ரூபன், 29, தீபக்ராஜ், 25, ஆகிய இருவரையும், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், ஜூன் 30ம் தேதி கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து, 14 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்தனர். இவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில், மெத் ஆம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டு வந்த, விருகம்பாக்கம் சின்மயா நகரைச் சேர்ந்த டாக்டர் ஈஸ்வர், 27, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இவர், ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தற்போது, சென்னையில் உள்ள தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இவரது கூட்டாளிகளையும் போலீசார் தேடுகின்றனர்.