/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முக கவசம் போடாத நாய்களால் காப்பகங்களில் டாக்டர்கள் அலறல்
/
முக கவசம் போடாத நாய்களால் காப்பகங்களில் டாக்டர்கள் அலறல்
முக கவசம் போடாத நாய்களால் காப்பகங்களில் டாக்டர்கள் அலறல்
முக கவசம் போடாத நாய்களால் காப்பகங்களில் டாக்டர்கள் அலறல்
ADDED : நவ 21, 2025 05:33 AM
சென்னை: முக கவசம் போடாமல் நாய்களை அழைத்து வருவதால், காப் பகங்களில் பணியாற்றும் டாக்டர்கள் அலறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில், கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பு, திரு.வி.க.நகர், லாய்ட்ஸ் காலணி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லுார் ஆகிய ஏழு இடங்களில், நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் காப்பகங்கள் உள்ளன. இங்கு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதற்காக நாய்களை அழைத்து வரும் உரிமையாளர்கள், அவற்றுக்கு முறையான முக கவசம் அணிவிப்பதில்லை. இதனால், நாய்கள் ஒன்றை ஒன்று கடித்துக்கொள்ளும் அபாயமும், மற்றவர்களை கடிக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
இதை நாய் வளர்ப்போர் கவனத்தில் கொள்ள வேண்டும் என, மையத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் கால்நடை டாக்டர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இதுகுறித்து, கண்ணம்மாப்பேட்டையில் உள்ள நாய் இன கட்டுப்பாட்டு மைய கால்நடை உதவி மருத்துவர் தயாநிதி கூறியதாவது:
நாய்கள் காப்பகங்களில் ஒரு நாளைக்கு 600 முதல் 700 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், 1,000 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துகிறோம்.
'தன்னுடைய நாய் அன்பானது, அது யாரையும் கடிக்காது. என் கட்டளையை அது பின்பற்றும். அதனால் முக கவசம் அணிவித்து, நாயை துன்புறுத்த மாட்டேன்' என, நாய் வளர்ப்போர் நினைக்கின்றனர்.
ஆனால், வீட்டில் சாந்தமாக இருக்கும் நாய்கள், பொது இடத்திற்கு வரும்போது, அவற்றின் சுபாவம் மாறிவிடும்.
ரேபிஸ் தடுப்பூசி செலுத்த, நாயை அழைத்து வருவோர், கட்டாயமாக முக கவசம் அணிவித்து அழைத்து வர வேண்டும். தவறுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ஏற்கனவே, முக கவசம் அணிவிக்காமல், பொது இடங்களுக்கு நாயை அழைத்து வருவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது. அதை பின்பற்றாவிட்டால், அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

