/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய சாஸ்த்ரா செஸ் தொடர் சென்னையில் 23ல் துவக்கம்
/
தேசிய சாஸ்த்ரா செஸ் தொடர் சென்னையில் 23ல் துவக்கம்
தேசிய சாஸ்த்ரா செஸ் தொடர் சென்னையில் 23ல் துவக்கம்
தேசிய சாஸ்த்ரா செஸ் தொடர் சென்னையில் 23ல் துவக்கம்
ADDED : நவ 21, 2025 05:32 AM
சென்னை: மெட்ராஸ் ஐ.ஐ.டி., மற்றும் மாநில செஸ் சங்கம் சார்பில், முதலாவது தேசிய சாஸ்த்ரா செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, அடையாரில் உள்ள மெட்ராஸ் ஐ.ஐ.டி., வளாகத்தில், வரும் 23ம் தேதி துவங்க உள்ளது.
இதில், நாட்டின் நட்சத்திர வீரர் - வீராங்கனையர் பல்வேறு வயது பிரிவுகளில் போட்டியிடுகின்றனர். இதில், சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள், இந்திய கிராண்ட் மாஸ்டர்களும் பங்கேற்கின் றனர். போட்டிகள், சுவிஸ் முறையில், 8 சுற்றுகளாக நடைபெற உள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் முதலிடம் பெறும் போட்டியாளருக்கு, 60,000 ரூபாய் என, பல்வேறு பிரிவுகளில் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்க, ஒவ்வொரு நபரிடமிருந்தும் நுழைவு கட்டணமாக 2,500 ரூபாய் பெறப்பட்டுள்ளது. போட்டிகள், நாளை மறுநாள் காலை 10:00 மணிக்கு துவங்குகின்றன.