/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவன், சிறுமியை கடித்து குதறிய நாய் ஒரே நாளில் இரு இடங்களில் சம்பவம்
/
சிறுவன், சிறுமியை கடித்து குதறிய நாய் ஒரே நாளில் இரு இடங்களில் சம்பவம்
சிறுவன், சிறுமியை கடித்து குதறிய நாய் ஒரே நாளில் இரு இடங்களில் சம்பவம்
சிறுவன், சிறுமியை கடித்து குதறிய நாய் ஒரே நாளில் இரு இடங்களில் சம்பவம்
ADDED : ஜூலை 15, 2025 12:41 AM
சென்னை, நேற்று ஒரே நாளில் இரண்டு இடங்களில் நாய் கடி சம்பவங்கள் நடந்தன. இதில் பாதிக்கப்பட்ட சிறுவன், சிறுமி என, இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெசன்ட் நகரை சேர்ந்த ராஜேஷ்குமார் மகள் மரியா, 9. இச்சிறுமி, வீட்டின் அருகே நேற்று விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பவர் வளர்த்து வரும் நாய், திடீரென பாய்ந்து, சிறுமியின் கையை கடித்து குதறியது.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சாஸ்திரி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறுவனும் பாதிப்பு
வேளச்சேரி, ஏ.ஜி.எஸ்., காலனி, நான்காவது பிரதான சாலையை சேர்ந்த ஆனந்தகுமார். இவரது மகன் பிரதிக், 9. இச்சிறுவன், வீட்டின் அருகே நேற்று பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
அவர் விளையாடிய பந்து சாலையில் படுத்திருந்த, தெரு நாய் அருகில் விழுந்தது. அதை எடுக்க சென்றபோது, ஆக்ரோஷமான நாய் சிறுவனின் தோள்பட்டை மற்றும் கன்னத்தில் கடித்து குதறியது.
உடனே, அச்சிறுவனை நாயிடம் இருந்து மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதுகுறித்து, வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
***