/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வித்யா மந்திர் கிரிக்கெட் போட்டி டான்பாஸ்கோ பள்ளி முதலிடம்
/
வித்யா மந்திர் கிரிக்கெட் போட்டி டான்பாஸ்கோ பள்ளி முதலிடம்
வித்யா மந்திர் கிரிக்கெட் போட்டி டான்பாஸ்கோ பள்ளி முதலிடம்
வித்யா மந்திர் கிரிக்கெட் போட்டி டான்பாஸ்கோ பள்ளி முதலிடம்
ADDED : ஜன 29, 2025 12:12 AM

சென்னை, வித்யா மந்திர் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான யு - 14 கிரிக்கெட் போட்டிகள், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில், கடந்த சில நாட்களாக நடந்தன.
இதன் இறுதிப் போட்டி நேற்று முன்தினம், ராயப்பேட்டையில் நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த, டான்பாஸ்கோ பள்ளி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் மூன்று விக்கெட் மட்டும் இழந்து, 190 ரன்களை எடுத்தது. அணியின் வீரர் ஹேமா ஹரிஷ், 79 ரன்களை அடித்தார்.
அடுத்து பேட்டிங் செய்த, பி.எஸ்.பி.பி., அணி, 30 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஆறு விக்கெட் இழப்புக்கு, 144 ரன்களை எடுத்தது. 46 ரன்கள் வித்தியாசத்தில், டான்பாஸ்கோ வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக, டான்பாஸ்கோ பள்ளியின் ஹேமா ஹரிஷ் தேர்வானார்.
ஒட்டு மொத்த போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் வித்யா மந்திர் பள்ளி அஸ்வத், பந்து வீச்சாளர் பி.எஸ்.பி.பி., அனிஷ், சிறந்த ஆல்ரவுண்டராக பி.எஸ்.பி.பி., பள்ளி பிரதீஷ், சிறந்த பீல்டராக டான்பாஸ்கோ பள்ளி கவுதம் ஆகியோர் தேர்வாகினர்.

