/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வித்யா மந்திர் 'டி - 20' கிரிக்கெட் போட்டி பைனலில் டான் பாஸ்கோ - பி.எஸ்.பி.பி.,
/
வித்யா மந்திர் 'டி - 20' கிரிக்கெட் போட்டி பைனலில் டான் பாஸ்கோ - பி.எஸ்.பி.பி.,
வித்யா மந்திர் 'டி - 20' கிரிக்கெட் போட்டி பைனலில் டான் பாஸ்கோ - பி.எஸ்.பி.பி.,
வித்யா மந்திர் 'டி - 20' கிரிக்கெட் போட்டி பைனலில் டான் பாஸ்கோ - பி.எஸ்.பி.பி.,
ADDED : ஜன 26, 2025 02:10 AM
சென்னை:பள்ளிகளுக்கு இடையிலான, வித்யா மந்திர் 'டி - 20' கிரிக்கெட் போட்டியில், எழும்பூர் டான் பாஸ்கோ - கெருங்கம்பாக்கம் பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளிகள், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
வித்யா மந்திர் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான யூ - 14 கிரிக்கெட் போட்டிகள், சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது.
போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. ஒரு குழுவில் நான்கு அணிகள் என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன. 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன. 30 ஓவர்கள் அடிப்படையில் போட்டி நடந்தது.
இதில், நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதியில், ராமசந்திரா பப்ளிக் பள்ளி மற்றும் எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் பேட் ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி, 16.2 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மிக எளிதான ஸ்கோரை துரத்திய, எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி அணி, 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, 59 ரன்கள் அடித்து, அபார வெற்றி பெற்றது. இதனால், ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு, முதல் அணியாக தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில், வித்யா மந்திர் பள்ளி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு, 130 ரன்கள் அடித்தது. அடுத்து கெருகம்பாக்கம் பி.எஸ்.பி.பி., பள்ளி அணி பேட் செய்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், ஒரு கட்டத்தில் ஆட்டம் மதில் மேல் பூனை என்பது போல வெற்றி தோல்வி நிர்ணயிப்பதில் விறுவிறுப்பு ஏற்பட்டது. கடைசி ஓவர் வரை சூடுபிடித்த இந்த ஆட்டத்தில், பி.எஸ்.பி.பி., அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டான்பாஸ்கோ மற்றும் பி.எஸ்.பி.பி., பள்ளி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

