தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டான் போஸ்கோ அணி கிரிக்கெட்டில் வெற்றி

டான் போஸ்கோ அணி கிரிக்கெட்டில் வெற்றி

டான் போஸ்கோ அணி கிரிக்கெட்டில் வெற்றி


ADDED : செப் 24, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், எழும்பூர் டான்போஸ்கோ பள்ளி அணி, 77 ரன்கள் வித்தியாசத்தில், கொட்டிவாக்கம் ராமச்சந்திரா பள்ளியை வீழ்த்தியது.

செங்கல்பட்டு, பையனுாரில் உள்ள விநாயக மிஷன் நிகர்நிலை பல்கலை சார்பில், நிறுவனர் கணேசன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், அதேவளாகத்தில் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த ‘லீக்’ ஆட்டத்தில், எழும்பூர் டான் போஸ்கோ, கொட்டிவாக்கம் ராமச்சந்திரா பள்ளிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டான் போஸ்கோ அணி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராமச்சந்திரா அணி, டான் போஸ்கோ பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 28.4 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து டான் போஸ்கோ அணி, 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us