/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவுன்சிலர்களை விரோதிகளாக பார்க்காதீர் அதிகாரிகளை கடிந்த பெருங்குடி சேர்மன்
/
கவுன்சிலர்களை விரோதிகளாக பார்க்காதீர் அதிகாரிகளை கடிந்த பெருங்குடி சேர்மன்
கவுன்சிலர்களை விரோதிகளாக பார்க்காதீர் அதிகாரிகளை கடிந்த பெருங்குடி சேர்மன்
கவுன்சிலர்களை விரோதிகளாக பார்க்காதீர் அதிகாரிகளை கடிந்த பெருங்குடி சேர்மன்
ADDED : நவ 13, 2024 09:43 PM
பெருங்குடி:பெருங்குடி மண்டல குழு கூட்டம், சேர்மன் ரவிசந்திரன் தலைமையில், நேற்று நடந்தது. கூட்டத்தில், விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து துவங்கவும், நடக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், பெரும்பாலான கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
கவுன்சிலர்கள் கூறியதாவது:
சென்னை குடிநீர் வாரியத்தின் பணிகளால் ஆங்காங்கே சில பிரச்னைகள் உள்ளன. அதை சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவேண்டும்.
வார்டு 185ல், குழாய்கள் உடைந்து, 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோது முறையான பதில் இல்லை. தொடர்ந்து, எம்.எல்.ஏ., சேர்மன் ஆகியோரிடம் முறையிட்ட பின்னரே, பிரச்னை சரி செய்யப்பட்டது.
சீனிவாசன் தெருவில் உள்ள ஆவின் பாலகம் 15 ஆண்டாக செயல்படவில்லை. அந்தக் கட்டடத்தை சீரமைத்து, மாணவர்கள், மக்கள் பயன்பெறும் விதமாக, நுாலகம் அமைக்க வேண்டும். முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
திட்ட பணிக்காக சாலைகள் தோண்டும்போது, புதிய கட்டுமான பணிகள் துவங்கும்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரி, தகவல் தருவதில்லை. இதனால், பகுதி மக்களிடம் எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேர்மன் ரவிசந்திரன் கூறுகையில், ''மண்டல கூட்டத்திற்கு முறையான அழைப்பு விடுத்தும், நீர்வளம், காவல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது.
''அதிகாரிகள், தங்கள் துறை சார்ந்து பணிகளை மேற்கொள்ளும்போது, அந்த வார்டு கவுன்சிலருக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும்; கவுன்சிலர்களை விரோதிகளாக பார்க்க வேண்டாம்,'' என்றனர்.
கூட்டத்தில், ஜல்லடையன்பேட்டை பகுதியில், அரசுக்கு சொந்தமான இடத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட தடையில்லா சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.