/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் மீண்டும் 'டபுள்டக்கர்' பஸ்கள்: இரு மாதங்களில் இயக்க முடிவு
/
சென்னையில் மீண்டும் 'டபுள்டக்கர்' பஸ்கள்: இரு மாதங்களில் இயக்க முடிவு
சென்னையில் மீண்டும் 'டபுள்டக்கர்' பஸ்கள்: இரு மாதங்களில் இயக்க முடிவு
சென்னையில் மீண்டும் 'டபுள்டக்கர்' பஸ்கள்: இரு மாதங்களில் இயக்க முடிவு
UPDATED : நவ 21, 2025 07:48 AM
ADDED : நவ 21, 2025 05:37 AM

சென்னை: சென்னையில் மீண்டும், 'டபுள்டக்கர்' பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இரண்டு மாதங்களில் அவற்றின் சேவை துவங்கும் என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில், 20 ஆண்டுகளுக்கு முன், டபுள்டக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒரே நேரத்தில் அதிக பேர் பயணம் செய்வதோடு, மாநகரங்களின் உயரமான கட்டடங்களின் அழகையும் ரசிக்க முடியும்.
சென்னையில், தாம்பரம் - பிராட்வே 18ஏ வழித்தடத்தில், அதிக பேருந்துகள் இயக்கப்பட்டன. மேம்பாலங்கள் அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், இந்த பேருந்துகளின் சேவை, 2008ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, டிரெய்லர் பேருந்துகள் தனியார் நிறுவனம் சார்பில், சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, புதிய டபுள்டக்டர் பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளை மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் டபுள்டக்கர் பேருந்து சேவை மீண்டும் துவக்கப்பட உள்ளது. அடுத்தடுத்து வரும் மின்சார பேருந்துகள் இயக்கத்தில், 20 டபுள்டக்கர் பேருந்துகளையும் இணைத்துள்ளோம்.
எனவே, இரண்டு மாதங்களில் டபுள்டக்கர் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

