/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீரிழிவு நோயாளிகளுக்கு தலைமுடி கொட்டும் டாக்டர் ஆதித்தன் தகவல்
/
நீரிழிவு நோயாளிகளுக்கு தலைமுடி கொட்டும் டாக்டர் ஆதித்தன் தகவல்
நீரிழிவு நோயாளிகளுக்கு தலைமுடி கொட்டும் டாக்டர் ஆதித்தன் தகவல்
நீரிழிவு நோயாளிகளுக்கு தலைமுடி கொட்டும் டாக்டர் ஆதித்தன் தகவல்
ADDED : நவ 14, 2025 02:50 AM
சென்னை: ''நீரிழிவு நோயாளிகளுக்கு, தோல் பாதிப்பு மட்டுமின்றி தலைமுடியும் உதிரும்,'' என, ஆதித்தன் தோல் மற்றும் முடி லேசர் மருத்துவமனை நிறுவனர் ஆதித்தன் கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
நீரிழிவு நோய், உடல் முழுதும் பாதிப்பை ஏற்படுத்துவதுபோல், தோல், தலை முடியையும் பாதிக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவு அதிகமானால் தோல் அணுக்களில் நீர் இழப்பு ஏற்படும். இதனால், கை, கால்களில் தோல் வறட்சி ஏற்படுவதோடு, உடல் மடிப்புகளில் கருப்பு மற்றும் தடிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும், 'கோண்டிடா' என்ற பூஞ்சைகள் வளர்ந்து, விரல், தொடை உள்ளிட்ட இடங்களில் தோல் சார்ந்த தொற்றுகளும் ஏற்படும்.
நீரி ழி வு நோயாளிகளுக்கு நரம்பு மற்றும் ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டு, தலைமுடி வேர்களின் ஊட்டச்சத்து குறைகிறது. இதனால், முடி உதிர்வதோடு, தலைத்தோலின் ஈரப்பதம் குறைந்து, அரிப்பு, பொடுகு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
நீரிழிவு நோயால் ஏற் படும் தோல் மற்றும் முடி பாதிப்புகளுக்கு சிகிச்சை செய்யும் முன், சர்க்கரை அளவை குறைப்பது, தலை முடியை பராமரிக்க, புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுப்பதோடு, தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதும் அவசியம்.
மேலும், தோல் மற்றும் முடி பாதிப்புகளுக்கு, மருந்துக்கடையில் மருந்து வாங்கிப் பயன்படுத்துவது, சமூக வலைதளங்களைப் பார்த்து சுய வைத்தியம் செய்வது, பக்கவிளைவுகளை உண்டாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

