/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் 39.52 லட்சம் வாக்காளர்கள் வரைவு பட்டியல் வெளியீடு
/
சென்னையில் 39.52 லட்சம் வாக்காளர்கள் வரைவு பட்டியல் வெளியீடு
சென்னையில் 39.52 லட்சம் வாக்காளர்கள் வரைவு பட்டியல் வெளியீடு
சென்னையில் 39.52 லட்சம் வாக்காளர்கள் வரைவு பட்டியல் வெளியீடு
ADDED : அக் 30, 2024 12:12 AM

சென்னை, சென்னை மாவட்டத்தில், 16 சட்டசபை தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் கூடுதல் அலுவலரும், துணை கமிஷனருமான பிருதிவிராஜ், ரிப்பன் மாளிகை வளாகத்தில், அரசியல் கட்சியினர் முன், நேற்று வெளியிட்டார்.
அதன்பின், துணை கமிஷனர் பிருதிவிராஜ் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 16 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், 2025 ஜன., 1ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியல், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டல அலுவலகங்கள் மற்றும் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது பெயர் குறித்த விபரங்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளலாம்.
சென்னை மாவட்டத்தில், 3,718 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில், வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில், 284 ஓட்டுச்சாவடிகள்; எழும்பூர் தொகுதியில், 169 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பட்டியலில் 25,628 ஆண்கள்; 27,669 பெண்கள்; 62 இதர வாக்காளர்கள் என, 53,359 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 12,818 ஆண்கள்; 13,178 பெண்கள்; 9 இதர வாக்களர்கள் என, 26,005 வாக்காளர்களின் பெயர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்தாண்டு மார்ச் 27ல் வெளியிடப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, 39 லட்சத்து, 25,144 பேர் இருந்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படவில்லை என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும், பெயர்கள் நீக்கத்தில் கவனமாக செயல்பட வேண்டும் என, அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.