/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகாரிகள் அலட்சியத்தால் சாலையில் வீணாகும் குடிநீர்
/
அதிகாரிகள் அலட்சியத்தால் சாலையில் வீணாகும் குடிநீர்
அதிகாரிகள் அலட்சியத்தால் சாலையில் வீணாகும் குடிநீர்
அதிகாரிகள் அலட்சியத்தால் சாலையில் வீணாகும் குடிநீர்
ADDED : மே 15, 2025 12:07 AM

சென்னை : பெரியமேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஒரு மாதத்திற்கு முன் குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டது. இதனால், குடிநீர் வினியோகம் செய்யப்படும் நேரங்களில், குழாய் விரிசல் வழியே சாலையில் குடிநீர் வழிந்தோடி வருகிறது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் குடிநீர் வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், தண்ணீர் ஊற்று எடுத்து வெளியேறும் இடங்களில், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் முழுதும் தண்ணீர் தேங்கி நிற்பதால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து, காயமடைந்து வருகின்றனர்.
உயிரிழப்பு ஏற்படும்முன், குடிநீர் குழாயில் ஏற்பட்ட விரிசலை, வாரிய அதிகாரிகள் சீரமைப்பதோடு, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தையும் மூடி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்..