/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வால்வு உடைப்பால் தினமும் வீணாகும் குடிநீர்
/
வால்வு உடைப்பால் தினமும் வீணாகும் குடிநீர்
ADDED : பிப் 19, 2024 01:52 AM

சோழிங்கநல்லுார்:நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து, தென் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக, இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பகுதிகளில், நிலத்திற்கடியில் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இதில், சோழிங்கநல்லுார் சந்திப்பில், குழாய் பிரிந்து செல்லும் இடத்தில் அமைக்கப்பட்ட வால்வு, ஐந்து நாட்களுக்கு முன் சேதமடைந்துள்ளது.
இதனால், குழாயில் குடிநீர் செல்லும் நேரத்தில், வால்வு வழியாக கசிந்து, ஓ.எம்.ஆரில் குடிநீர் வழிந்தோடுகிறது.
இந்த வகையில், தினமும் நான்கு முறை, ஒவ்வொரு முறையும், 2 முதல் 3 மணி நேரம் வரை, குடிநீர் வீணாகிறது.
ஏற்கனவே, மெட்ரோ ரயில் பணிக்காக சாலையில் ஆங்காங்கே பள்ளம் எடுத்து, முறையாக சீரமைக்கவில்லை. இதில், குடிநீர் தேங்குவதால் சாலை சேதம் மேலும் அதிகரிக்கிறது.
இதனால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மொபைல் போனில் தகவல் தெரிவித்துள்ளனர். இருந்தும், குடிநீர் வீணாவதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வால்வு பகுதியை சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

