/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரவில் ' பொட்டலம் ' விற்ற ஓட்டுநர் கைது
/
இரவில் ' பொட்டலம் ' விற்ற ஓட்டுநர் கைது
ADDED : ஜன 30, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, : பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, போதை பொருட் களுடன் ஆட்டோவில் வந்த,ஆவடியை சேர்ந்த மனோஜ்குமார், 24, ராஜ்குமார், 25, விக்னேஷ், 27, பிரதீப், 24, அரிதர், 27 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
பகலில் ஆட்டோ ஓட்டிய இவர்கள் இரவில், கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி விற்றதும், மும்பை சென்று, போதை மாத்திரைகளை வாங்கி வந்து, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து விற்பதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து, 3 கிலோ கஞ்சா, 1,400 போதை மாத்திரைகள், 5 போதை ஊசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

