/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெளிவட்ட சாலையில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி
/
வெளிவட்ட சாலையில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி
ADDED : பிப் 02, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்: வெளிவட்ட சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குன்றத்துார் அருகே சின்னப்பணிச்சேரியைச் சேர்ந்தவர் பாபு, 45; லாரி ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, 'அசோக் லேலண்ட்' புதிய லாரிக்கு பாடி கட்டுவதற்காக திருச்சி புறப்பட்டார்.
மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே எருமையூர் பகுதியை கடந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த பாபு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த தாம்பரம் போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

