தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆட்டோவில் இறந்து கிடந்த ஓட்டுநர்

ஆட்டோவில் இறந்து கிடந்த ஓட்டுநர்

ஆட்டோவில் இறந்து கிடந்த ஓட்டுநர்


ADDED : செப் 26, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கம் அருகே, ஆட்டோவில் 35 வயது ஓட்டுநர் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

பல்லாவரம் –- துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில், பிரபல உணவகம் அருகே நின்றிருந்த ஒரு ஆட்டோவினுள், 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், நேற்று மதியம் 1:00 மணியளவில் இருக்கையில் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.

தகவலறிந்த மேடவாக்கம் போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரித்தனர். இதில், இறந்து கிடந்தவர் உள்ளகரம், ராஜாஜி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக், 35, என்பதும், மஞ்சள் காமாலை பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது.

உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகே, இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us