/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நசுங்கிய ஆட்டோவில் சிக்கிய ஓட்டுர்
/
நசுங்கிய ஆட்டோவில் சிக்கிய ஓட்டுர்
ADDED : பிப் 14, 2025 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம், பல்லாவரம் மேம்பாலத்தில், நேற்று மதியம், விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வந்த ஆட்டோ ஒன்று, திடீரென எதிர்திசையில் சென்றது.
அப்போது, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் நோக்கி சென்ற லோடு ஆட்டோ, அதன்மீது மோதியது. இதில், ஆட்டோவின் முன்பகுதி நொறுங்கி, ஓட்டுநர் உள்ளே சிக்கினார்.
போலீசார் விரைந்து, நொறுங்கிய முன்பகுதியை, கயிறு மூலம் இழுத்து, ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த விபத்தால், மேம்பாலத்தில், 15 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.