/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடும்பத்துடன் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற டிரைவர்
/
குடும்பத்துடன் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற டிரைவர்
குடும்பத்துடன் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற டிரைவர்
குடும்பத்துடன் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற டிரைவர்
ADDED : ஏப் 11, 2025 11:52 PM
எம்.கே.பி.நகர், சென்னை வியாசர்பாடி, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ரகு, 35; ஆட்டோ டிரைவர். திருமணமாகி சோனியா என்ற மனைவியும், நில்சன், 13 என்ற மகனும், நிகிதா ைஷனிி, 8 என்ற மகளும் உள்ளனர். சோனியா, தன் திருமணத்தின்போது அணிந்து வந்த 10 சவரன் தங்க நகையை, மாமியார் மரகதத்திடம் கொடுத்துள்ளார். திருப்பிக் கேட்டபோது, நகையை தன்னிடம் தரவில்லை என்று மாமியார் கூறியதால், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து, எம்.கே.பி.நகர் நகர் காவல் நிலையத்தில், சோனியா நேற்று புகார் கொடுத்தார். போலீசார் மரகதத்தை அழைத்து விசாரித்தனர். நான் நகையை வாங்கவில்லை என்று, அவர் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த, மரகதத்தின் மகன் ரகு, ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து வந்து, அவர் மீதும், மனைவி மற்றும் இரு குழந்தைகள் மீதும் ஊற்றி, குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றார். பதறிப்போன போலீசார் அவர்களை தடுத்து, தண்ணீர் ஊற்றினர். பின் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

