/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை
/
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை
ADDED : அக் 14, 2025 01:02 AM
பூந்தமல்லி,
பூந்தமல்லி அடுத்த, திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் ராமு மனைவி உஷா, 47. கடந்த ஜூலை மாதம், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, வாகனத்தின் மீது மோதியதில், பலத்த காயமடைந்த உஷா, அதே இடத்திலேயே பலியானார். ராமு, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோயப் அக்தரை, 23 கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1ல் நடந்து வந்தது.
நேற்று, வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அமுதா, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சோயப் அக்தருக்கு, ஆறு மாதம் சிறை தண்டனையும், 1,600 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.