/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
24ல் ஓட்டுநர் தினம்: எம்.டி.சி., புது உத்தரவு
/
24ல் ஓட்டுநர் தினம்: எம்.டி.சி., புது உத்தரவு
ADDED : ஜன 22, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், கிளை மேலாளர்கள், பணி மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
உலகெங்கும் வரும் 24ம் தேதி ஓட்டுநர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
போக்குவரத்துக் கழகத்தின் அச்சாணியாக திகழும் ஓட்டுநர்களின் பங்களிப்பை பாராட்டி, 'பாதுகாப்பாக பேருந்தை இயக்கியதற்கு நன்றி' என தெரிவித்து, அவர்களுக்கு பூங்கொத்து வழங்க வேண்டும்.
மேலும், 'பாதுகாப்பாக பஸ்சை இயக்க உற்ற துணையாக இருந்ததற்கு நன்றி' என நடத்துநருக்கு பேனாவை பரிசளித்து கவுரவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.