/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஸ்டார்ட்' ஆக அடம்பிடிக்கும் அமரர் ஊர்திகள் உடலை வைத்து தள்ள ஆள் தேடும் டிரைவர்கள்
/
'ஸ்டார்ட்' ஆக அடம்பிடிக்கும் அமரர் ஊர்திகள் உடலை வைத்து தள்ள ஆள் தேடும் டிரைவர்கள்
'ஸ்டார்ட்' ஆக அடம்பிடிக்கும் அமரர் ஊர்திகள் உடலை வைத்து தள்ள ஆள் தேடும் டிரைவர்கள்
'ஸ்டார்ட்' ஆக அடம்பிடிக்கும் அமரர் ஊர்திகள் உடலை வைத்து தள்ள ஆள் தேடும் டிரைவர்கள்
ADDED : அக் 17, 2025 11:10 PM
அரசின் அமரர் ஊர்திகள் அடிக்கடி மக்கர் செய்வதால், உடலை வைத்து தள்ளி, 'ஸ்டார்ட்' செய்ய, ஓட்டுனர்கள் அருகில் உள்ளவர்களின் உதவியை நாடி வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலை, சொந்த ஊர்களுக்கு எடுத்து சென்று ஒப்படைக்க, அரசின் அமரர் ஊர்திகள் சேவை செயல்பாட்டில் உள்ளது.
இச்சேவையை, மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து, இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அதன்படி, மாநிலம் முழுதும், 194 அமரர் ஊர்திகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், தினமும் 450 உடல்கள் எடுத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இச்சேவையை, 155377 என்ற எண்ணை அழைப்பதன் வாயிலாக, மக்கள் இலவசமாக பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள அமரர் ஊர்திகள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால், 'ஸ்டார்ட்' ஆகாமல் ஒவ்வொரு முறையும் மக்கர் செய்து வருகிறது.
குறிப்பாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆறு அமரர் ஊர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில், மூன்று வாகனங்கள், 'ஸ்டார்ட்' செய்வதில் சிக்கல் உள்ளது. வாகனங்களில் உடல்கள் ஏற்றப்பட்டப்பின், 'ஸ்டார்ட்' ஆகாததால், அருகில் உள்ளவர்களை அழைத்து வாகனத்தை சில துாரம் தள்ளி ஓட்டுனர்கள் இயக்குகின்றனர்.
தினமும் இதேநிலை தொடர்வதால், ஓட்டுனர்களும், இறந்தவர்களின் உறவினர்களும் அள்ளல்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் கூறியதாவது:
அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் இயங்கி வந்த வாகனங்கள்தான், பின்னாளில் அமரர் ஊர்தியாக பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், மாநிலம் முழுதும் உள்ள பெரும்பாலான அமரர் ஊர்திகள் பழுதடைந்து இருப்பதால், 'ஸ்டார்ட்' ஆவதில் சிக்கல் உள்ளது.
சில நேரம் வாகனம் பாதியில் நின்றாலும், இறந்தவர்களின் உறவினர்கள், அருகில் உள்ளவர்களை அழைத்து தான், வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய வேண்டியுள்ளது.
உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் கண்டு கொள்வதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாநில செயல்திட்ட தலைவர் செல்வகுமார் கூறியதாவது:
சென்னையில் இருந்து திருச்சியை தாண்டி தென் மாவட்டங்களுக்கு தினசரி, எட்டு உடல்கள் அமரர் ஊர்திகளில் எடுத்துச் செல்லப்படுகிறது.
பெரும்பாலான அமரர் ஊர்திகள் நன்றாகவே உள்ளன. ஏற்கனவே, 108 ஆம்புலன்ஸ் சேவையில் பயன்படுத்திய வாகனங்கள்தான், அமரர் ஊர்தியிலிலும் பயன்படுத்தப்படுவதால், சில வாகனங்கள் அவ்வப்போது பழுது ஏற்படக்கூடும்.
இந்நிலையை தவிர்க்க, 37 புதிய அமரர் ஊர்திகள் வாங்கப்பட்டுள்ளன. அதில், உடலை எடுத்து செல்வதற்கு, 'குளிர்சாதன பெட்டி' பொருத்தும் பணி நடந்து வருகிறது.
அடுத்த வாரத்தில் இருந்து, அவை செயல்பாட்டுக்கு வரும். அதன்பின், பழுதடைந்த வாகனங்கள், அமரர் ஊர்தி சேவையில் இருந்து நீக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
***
- நமது நிருபர் -