/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு தொல்லை போதை வாலிபர் கைது
/
சிறுமிக்கு தொல்லை போதை வாலிபர் கைது
ADDED : நவ 20, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.: கொடுங்கையூரை சேர்ந்தவர், 12 வயது சிறுமி. இவர், நேற்று தன் வீட்டருகே உள்ள மாளிகை கடைக்கு சென்று வந்த நிலையில், அவ்வழியே குடிபோதையில் வந்த மர்ம நபர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட, கொடுங்கையூர், 6வது பிளாக்கை சேர்ந்த கார்த்திகேயன், 39, என்பவரை, போக்சோ சட்டத்தின் கீழ், நேற்று கைது செய்தனர்.

