/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது
/
போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது
ADDED : நவ 20, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர்: கொடுங்கையூர், வாசுகி நகரில் போதை மாத்திரைகள் விற்பதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது.
அதன்படி அங்கு சென்ற போலீசார், போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்தனர்.
அதன்படி, வியாசர்பாடியை சேர்ந்த சஞ்சய், 23, கொடுங்கையூரை சேர்ந்த அரவிந்த், 27, அஜித்குமார், 27, பைசன் அகமது, 23, இக்பால், 22, ஆகியோரை கைது செய்தனர்.

