ADDED : ஏப் 28, 2025 01:54 AM
கோயம்பேடு:பணியில் இருந்த போலீஸ்காரரை தாக்கிய போதை ஆசாமியை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
வேலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத் குமார், 30. இவர், கோயம்பேடு பேருந்த நிலைய காவல் நிலையத்தில், குற்றப்பிரிவில் போலீஸ்காரராக பணி செய்து வருகிறார்.
நேற்று அதிகாலை கோயம்பேடு 100 அடி சாலையில், ஏ.வி.ஏ., டீ கடை அருகே மது போதையில் நின்றவரிடம், இங்கு ஏன் நிற்கிறீர்கள் என்று விசாரித்தார்.
அப்போது, முன்னுக்கு பின் முரணாக பேசிய நபர், காவலரிடம் வாக்குவாதம் செய்தார். அசிங்கமாக பேசி கையால் தாக்கினார். இதில், வினோத்தின் போலீஸ் சீருடை கிழிந்தது.
தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த அருண் பிரபு, 24 என்பதும், பூந்தமல்லியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

