/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியிடம் அத்துமீறல் போதை ஆசாமிக்கு தர்ம அடி
/
சிறுமியிடம் அத்துமீறல் போதை ஆசாமிக்கு தர்ம அடி
ADDED : ஏப் 03, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். திடீரென வீடு புகுந்த போதை ஆசாமி, சிறுமியின் வாயை பொத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார்.
சிறுமி மற்றும் சிறுமியின் பாட்டி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு, அந்த நபரை மடக்கி பிடித்து, அடித்து உதைத்தனர்.
பின், அயனாவரம் மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல், 42, என்பது தெரிய வந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

