/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் போலீசிடம் அத்துமீறல் போதை ஆசாமிக்கு '3 ஆண்டு'
/
பெண் போலீசிடம் அத்துமீறல் போதை ஆசாமிக்கு '3 ஆண்டு'
பெண் போலீசிடம் அத்துமீறல் போதை ஆசாமிக்கு '3 ஆண்டு'
பெண் போலீசிடம் அத்துமீறல் போதை ஆசாமிக்கு '3 ஆண்டு'
ADDED : நவ 29, 2025 03:27 AM
பூந்தமல்லி: பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போதை ஆசாமிக்கு மூன்றாண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
வளசரவாக்கம் அருகே ராமாபுரம், திருவள்ளூர் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 2023ம் ஆண்டு திருவிழா நடந்தது.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயதான பெண் போலீசை, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், 47, என்பவர் மது போதையில் பாலியல் சீண்டல் செய்தார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த ராமாபுரம் போலீசார், கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1ல் நடந்து வந்தது.
இதில் குற்றவாளி க ண்ணன் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி அமுதா, நேற்று முன்தினம் தீர்ப்பு வ ழங்கினார். இதையடுத்து கண்ணன், புழல் சிறை யில் அடைக்கப்பட்டார்.

