/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்தை சீரமைக்காமல் அபராதம் வசூலிப்பதில் குறி மாநகராட்சி அலுவலகம் அருகே அபராதம் வசூலிக்க கூடாது போலீசார் மீது ஆவடி மேயர் காட்டம்
/
போக்குவரத்தை சீரமைக்காமல் அபராதம் வசூலிப்பதில் குறி மாநகராட்சி அலுவலகம் அருகே அபராதம் வசூலிக்க கூடாது போலீசார் மீது ஆவடி மேயர் காட்டம்
போக்குவரத்தை சீரமைக்காமல் அபராதம் வசூலிப்பதில் குறி மாநகராட்சி அலுவலகம் அருகே அபராதம் வசூலிக்க கூடாது போலீசார் மீது ஆவடி மேயர் காட்டம்
போக்குவரத்தை சீரமைக்காமல் அபராதம் வசூலிப்பதில் குறி மாநகராட்சி அலுவலகம் அருகே அபராதம் வசூலிக்க கூடாது போலீசார் மீது ஆவடி மேயர் காட்டம்
ADDED : நவ 29, 2025 03:27 AM

ஆவடி: 'ஆவ டி மாநகராட்சி அலுவலகம் எதிரில், அபராதம் விதிப்பதை போக்குவரத்து போலீசார் நிறுத்த வேண்டும். போலீசார் அபராதம் விதிப்பதால், மாநகராட்சிக்கு வரி செலுத்த வருவோர் அவதிப்படுகின்றனர்' என, ஆவடி மேயர் உதயகுமார் குற்றஞ் சாட்டினார்.
ஆவடி மாநகராட்சி கூட்டம், மேயர் உதயகுமார் தலைமையில், நேற்று காலை நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சரண்யா, கவுன்சிலர்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், 105 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் வார்டு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஜோதிலட்சுமி, தி.மு.க., 22வது வார்டு: மாநகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ஒரே பகுதியில், 10 பேரை தெரு நாய்கள் கடித்துள்ளன. நாய்களுக்கான, 'ஏ.பி.சி., சென்டர்' திட்டம் என்ன ஆனது என, தெரியவில்லை. பாதாள சாக்கடை மூடியால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
சரண்யா, கமிஷனர்: நாய்களை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளில் விரைவில், அதிகாரிகள் களமிறங்க உள்ளனர். நாய்களுக்கான ஏ.பி.சி., சென்டர் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் செயல்பட துவங்கும்.
மேகலா ஸ்ரீனிவாசன், காங்., 38வது வார்டு: குப்பை முறையாக அப்புறப்படுத்தப்படவில்லை. குப்பை பிரச்னையால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. தினமும் 15 துாய்மை பணியாளர்கள் விடுப்பில் இருக்கின்றனர்.
செல்வம், தி.மு.க., 30வது வார்டு: எங்கள் வார்டில் நான்கு இடங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும். இந்த பிரச்னை தொடர்பாக, 10 முறை மனு அளித்துள்ளேன். ஆனால், இதுவரை எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
மதுரை ஆறுமுகம், அ.தி.மு.க., 25வது வார்டு: அண்ணனுார் 60 அடி சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயில், பல இடங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையில் திரியும் மாடுகள் பிடித்து காஞ்சிபுரத்தில் அடைப்பதற்கு பதில், நாகம்மை நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் கோ சாலை அமைக்க வேண்டும்.
ராஜேந்திரன், தி.மு.க., 42வது வார்டு: சாலையில் கழிவுநீர் வெ ளி யேற்றினால் அபராதம் விதிக்கப்படுகிறது. எங்கள் வார்டில் உள்ள தி ரு.வி.க., நகரில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதற்கு அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கலாமா?
அதேபோல், ஆவடி சி.டி.எச்., சாலை, புதிய ராணுவ சாலை யில் காலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து போலீசார், அதை சீர் செய்யாமல் அப ராதம் விதிப் பதிலேயே குறியாக உள்ளனர். குறிப்பாக மாநகராட்சி அலுவலகம் எதிரே அபராதம் விதிக்கப்படுகிறது.
உதயகுமார், மேயர்: மாநகராட்சி அலுவலகம் எதிரே நின்று, அபராதம் விதிப்பதை போக்குவ ரத்து போலீசார் நிறுத்த வேண்டும். போலீசார் இந்நடவடிக்கையால், மாநகராட்சிக்கு வ ரி செலுத்த வருவோர் அவதிப்படுகின்றனர். வரி செலுத்த வந்து, அபராதம் கட்ட வேண்டுமா என கேள்வி எழுப்புகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

