/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை வாலிபர் 'வெறி': உயிரிழந்த மூதாட்டி?
/
போதை வாலிபர் 'வெறி': உயிரிழந்த மூதாட்டி?
ADDED : டிச 23, 2024 06:39 AM
சென்னை : சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் தங்கி வந்த லட்சுமி, 65, என்பவர், நேற்று முன்தினம் அங்கு இறந்து கிடந்தார்.
இவரை, அதே ரயில் நிலைய நடைமேடையில் தங்கியிருந்த மாற்றுத்திறாளி முத்து, 38, கொலை செய்து இருக்கலாம் என, சந்தேகம் எழுந்தது.
இதனால், மூதாட்டியின் உறவினர்கள் முத்துவை தாக்கினர். அவரை, ரயில்வே போலீசார் மீட்டு விசாரித்தனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
முத்துவும், லட்சுமியும் பிச்சை எடுத்து பிழைத்து வந்தனர். அவர்கள் இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது, மூதாட்டியுடன், இரண்டு முறை பாலியல் ரீதியாக உறவு கொண்டதாகவும், மூன்றாவது முறை உறவு கொள்ள சென்ற போது, மூதாட்டி அசைவற்று கிடந்ததாகவும், அவரை தான் கொலை செய்யவில்லை எனவும், முத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
மூதாட்டி மாரடைப்பால் உயிரிழந்து இருக்கலாம் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து முத்துவிடம் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

