/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் நிலையத்தில் அடாவடி போதை இளைஞர்கள் கைது
/
ரயில் நிலையத்தில் அடாவடி போதை இளைஞர்கள் கைது
ADDED : நவ 27, 2024 02:26 AM

சென்னை:திருநின்றவூர் அடுத்த பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம், 54; பட்டாபிராம் துணை மின் நிலையத்தில், 'லைன்மேனாக' பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் மாலை, பணி முடிந்து வீட்டிற்குச் செல்ல, ஹிந்து கல்லுாரி ரயில் நிலையம் வந்தார்.
அப்போது, ஒன்றாவது நடைமேடையில், நான்கு இளைஞர்கள் மது போதையில், கையில் பிளாஸ்டிக் குழாயுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்தனர்.
மேலும், பயணியர் சிலரை சரமாரியாக பிளாஸ்டிக் குழாயால் தாக்கினர். பரமசிவம் இதை தட்டிக் கேட்டபோது, அவரை பிளாஸ்டிக் குழாயால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த அவரை, ஆவடி ரயில்வே போலீசார் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரித்த ரயில்வே போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட பட்டாபிராம், கோபாலபுரத்தைச் சேர்ந்த இப்ராஹிம், 23, பட்டாபிராம் சித்தேரிக்கரையைச் சேர்ந்த சுபாஷ், 24, மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

