/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
95 வயது பாட்டி கொலை போதை பேரன் கைது
/
95 வயது பாட்டி கொலை போதை பேரன் கைது
ADDED : ஜூலை 31, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோமங்கலம், சோமங்கலத்தில் பாட்டியை அடித்து கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.
சோமங்கலம், மேலாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 46. இவர், நேற்று மாலை போதையில் இருந்துள்ளார். அவரது பாட்டி சின்னம்மாள், 95, என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த அவர், பாட்டியை கட்டையால் தாக்கி, கீழே தள்ளிவிட்டதாக தெரிகிறது. கீழே விழுந்த மூதாட்டி, சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். சோமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.