ADDED : பிப் 19, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாம்பலம்:தள்ளுவண்டி கடையில் உணவருந்திய இரு நண்பர்களை தாக்கிய போதை நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
தி.நகர், பசுல்லா சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணா, 35. இவர், தன் நண்பரான கணேசன் என்பவருடன், தி.நகர் வி.என்., சாலையில் உள்ள தள்ளுவண்டி கடையில், நேற்று முன்தினம் இரவு உணவருந்தினார்.
அங்கு மது போதையில் இருந்த மர்ம நபர்கள் இருவர், வீண் தகராறு செய்து கிருஷ்ணா மற்றும் அவரது நண்பரை கைகளாலும், பாட்டிலாலும் தாக்கினர்.
இதில் காயமடைந்த இருவரும், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்த புகாரின்படி, மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

