/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை ஆசாமி வீட்டிற்கு வீடு மொட்டை மாடியில் தாவி ரகளை நள்ளிரவில் பரபரப்பு
/
போதை ஆசாமி வீட்டிற்கு வீடு மொட்டை மாடியில் தாவி ரகளை நள்ளிரவில் பரபரப்பு
போதை ஆசாமி வீட்டிற்கு வீடு மொட்டை மாடியில் தாவி ரகளை நள்ளிரவில் பரபரப்பு
போதை ஆசாமி வீட்டிற்கு வீடு மொட்டை மாடியில் தாவி ரகளை நள்ளிரவில் பரபரப்பு
ADDED : நவ 06, 2025 12:23 AM
குமரன் நகர்: மேற்கு மாம்பலத்தில், வீட்டிற்குவீடு மொட்டை மாடியில் தாவி ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால், நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை குமரன் நகர், கோதண்டராமன் கோவில் தெருவில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஆள் நடமாட்டம் இருந்தது.
அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது, 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் மது போதையில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. திடீரென அங்கிருந்து பக்கத்து வீட்டு மாடியில் குதித்துள்ளார்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவே, அங்கிருந்து மற்றொரு வீடு என தாவித்தாவி சென்றுள்ளார்.
பின், அதே தெருவில் உள்ள வீட்டின் முதல் மாடியில் இருந்து சாலையில் குதிக்க முயன்றார்.
அப்போது, வீட்டின் நுழைவாயில் கேட்டின் கூர்மையான கம்பி, அவரது வலது கை மணிக்கட்டில் குத்தியது. இதனால், அங்கிருந்து தப்ப முடியவில்லை.
இதையடுத்து, பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த குமரன் நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், இரும்பு கம்பியை வெட்டி அந்த நபரை மீட்டனர். பின், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணையில், கே.கே.நகரை சேர்ந்த சேகர், 38, என, தெரியவந்தது. திருட்டில் ஈடுபட முயன்றாரா அல்லது மது போதையில் ரகளையில் ஈடுபட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

