/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
/
ஆவடியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
ஆவடியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
ஆவடியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
ADDED : மே 04, 2025 12:12 AM
ஆவடி,
ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், இளைஞர் மத்தியில் போதைப்பொருளை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு, 'ஏ.பி.சி., கப் சீசன் - 2' அறிமுக நிகழ்ச்சி, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில், திருமுல்லைவாயில் போலீஸ் கன்வென்சன் சென்டரில், நேற்று நடந்தது. இதில், கிரிக்கெட் போட்டிக்கான போஸ்டரை கமிஷனர் சங்கர் அறிமுகப்படுத்தினார்.
இளைஞர்கள், அரசு ஊழியர்கள், போலீசார் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் போட்டி, வரும் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் 64 அணிகளும், போலீசார், அரசு ஊழியர்கள் பங்கேற்கும் 16 அணிகளும் பங்கு பெற உள்ளன.
ஆவடி ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5ம் அணி, பருத்திப்பட்டு தனியார் கல்லுாரி மற்றும் ஆவடி ஆர்.சி., மைதானங்களில், வைட் ரெட் டென்னிஸ் பந்தில் இப்போட்டிகள் நடக்கின்றன.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள அணிகள், பதிவு கட்டணம் ஏதுமின்றி, 8ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.
பொது பிரிவில், முதலில் பதிவு செய்யும், 64 அணிகள் மட்டும் போட்டியில் அனுமதிக்கப்படுவர். பதிவு செய்ய, 98940 40459 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.