ADDED : ஜூலை 17, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.ஜி.ஆர்., நகர், எம்.ஜி.ஆர்.நகரில் போதை பொருட்கள் வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
எம்.ஜி.ஆர்.நகர், கே.கே., சாலையில் உள்ள ஹோட்டலில் போதை பொருள் வைத்திருந்த ஐ.டி., ஊழியர் மூவர் உட்பட நான்கு பேரை, போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 3 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 28 எம்.எல்., கஞ்சா குழம்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த திருவேற்காடைச் சேர்ந்த அவினாஷ், 25, மற்றும் குரோம்பேட்டையைச் சேர்ந்த வினோதினி என்ற ஜாய்ஸ், 24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

