/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முருங்கைக்காய் கிலோ ரூ.300க்கு விற்பனை
/
முருங்கைக்காய் கிலோ ரூ.300க்கு விற்பனை
ADDED : நவ 24, 2025 01:46 AM
கோயம்பேடு: கோயம்பேடு சந்தை யில், நேற்று 1 கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்க்கு விற்பனையானது.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஒட்டன்சத்திரம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, முருங்கைக்காய் வரத்து உள்ளது.
ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை முருங்கைக்காய் சீசன் என்பதால், தினமும் சராசரியாக 10 லாரி முருங்கைக்காய் வரத்து இருந்தது. கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை, 200 டன் முருங்கைக்காய் தேவை உள்ளது. ஆனால், முருங்கைக்காய் சீசன் முடிந்தது, மழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், நேற்று 1 டன் முருங்கைக்காய் மட்டுமே விற்பனைக்கு வந்தது.
இதனால், ஒரு கிலோ முருங்கைக்காய் மொத்த விற்பனையில் 300 ரூபாயை எ ட்டியது. சில்லரை விற்பனையில் 300 ரூபாய்க்கும் மேல் எகிறியது. ஒரு முருங்கைக்காய் 50 ரூபாய் வரை விற்பனையானது.

