ADDED : ஜன 24, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கோல்கட்டாவில் மோசமான வானிலை நிலவியதால், விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது.
துபாயில் இருந்து கோல்கட்டாவிற்கு, 270 பயணியருடன் 'எமிரேட்ஸ்' விமானம் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. கோல்கட்டா வான் வெளியை நெருங்கியபோது, வானிலை மோசமாக இருந்துள்ளது.
அங்குள்ள அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, நேற்று காலை 10:00 மணிக்கு, விமானம் சென்னையை வந்தடைந்தது. கோல்கட்டாவில் வானிலை தெளிவான பின் சென்னையில் இருந்து விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

