/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரத்து குறைவால் மீன் விலை விர்ர்... பேரம் பேசி வாங்கிய அசைவ பிரியர்கள்
/
வரத்து குறைவால் மீன் விலை விர்ர்... பேரம் பேசி வாங்கிய அசைவ பிரியர்கள்
வரத்து குறைவால் மீன் விலை விர்ர்... பேரம் பேசி வாங்கிய அசைவ பிரியர்கள்
வரத்து குறைவால் மீன் விலை விர்ர்... பேரம் பேசி வாங்கிய அசைவ பிரியர்கள்
ADDED : நவ 11, 2024 01:54 AM

காசிமேடு:சஷ்டி விரதம் முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று காசிமேடில் குவிந்த மக்கள் கூட்டத்தால், மீன் விலை ஏகிறியது.
காசிமேடு துறைமுகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், திருவிழா கூட்டம் போல் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கும்.
மீன்களை வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தோர் என, அதிகாலை முதலே மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், கந்த சஷ்டி விரதம் நவ., 2ம் தேதி துவங்கி நவ., 8ம் தேதி முடிவடைந்தது. இதனால், மக்கள் அசைவ உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தனர்.
சஷ்டி விரதம் முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மீன்பிடிக்க சென்ற 20க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன்பிடித்து கரை திரும்பின. இதில் பாறை, கறுப்பு வவ்வால் உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகம் இருந்தது.
மக்கள் கூட்டத்திற்கு ஏற்ப மீன்களின் வரத்து இல்லாததால், மீன் விலை உயர்ந்தது. இருந்தும் பொதுமக்கள் பேரம் பேசி மீன்களை வாங்கிச் சென்றனர்.
இதேபோல், சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியிலும் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அதிகமாக இருந்தது.