/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பாலம், தண்டவாளம் இடைவெளியால் சிக்கல் உயரமாக தடுப்பு அமைக்க வேண்டுகோள்
/
மேம்பாலம், தண்டவாளம் இடைவெளியால் சிக்கல் உயரமாக தடுப்பு அமைக்க வேண்டுகோள்
மேம்பாலம், தண்டவாளம் இடைவெளியால் சிக்கல் உயரமாக தடுப்பு அமைக்க வேண்டுகோள்
மேம்பாலம், தண்டவாளம் இடைவெளியால் சிக்கல் உயரமாக தடுப்பு அமைக்க வேண்டுகோள்
ADDED : பிப் 10, 2024 12:27 AM

சென்னை, ஓ.எம்.ஆரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, இந்திரா நகர் சந்திப்பில், 18.15 கோடி ரூபாயில், 'யு' வடிவ மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம், 237 மீட்டர் நீளம் உடையது.
துரைப்பாக்கம், வேளச்சேரி, தரமணியில் இருந்து வரும் வாகனங்கள், 'யு' வடிவ மேம்பாலத்தின் வழியாக, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதிக்கு, நெரிசல் இல்லாமல் செல்ல முடியும்.
இந்த மேம்பாலம், 2023 நவ., 23ல் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. பாலத்தின் இறங்கும் பகுதி, 120 மீட்டர் நீளம் உடையது.
மேம்பாலத்தை ஒட்டி, ரயில் தண்டவாளம் செல்கிறது. இரண்டுக்கும் இடையே, அரை அடிக்கும் குறைவான இடைவெளி உள்ளது.
இதனால், பாலத்தில் இருந்து தண்டவாளத்தில் ஏறி குதிக்கவும், தண்டவாளத்தில் இருந்து பாலத்தில் குதிக்கவும் வாய்ப்புள்ளது. இது, சட்டவிரோத செயலில் ஈடுபட வாய்ப்பாகவும் உள்ளது.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இரு பக்கமும் ஏறி குதிக்காத வகையில் தடுப்பு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
தண்டவாளத்தை ஒட்டி வரும் பகுதியில், பாலத்தின் பக்கவாட்டு சுவரை, 8 அடி வரை உயர்த்தி உள்ளோம். இதனால் ஏறி செல்ல முடியாது. ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு இருப்பதால், அசம்பாவிதம் நடக்க வாய்ப்பில்லை.
எனினும், பாலத்தை ஒட்டி வாகனத்தை நிறுத்தி ஏறி, தண்டவாளம் செல்லாத வகையில், வேறு வகைகளில் தடுப்பு அமைக்க முடியுமா என ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.