/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இ -- பைலிங்' தொழில்நுட்ப கோளாறு: சரிசெய்ய வலியுறுத்தி மறியல்
/
'இ -- பைலிங்' தொழில்நுட்ப கோளாறு: சரிசெய்ய வலியுறுத்தி மறியல்
'இ -- பைலிங்' தொழில்நுட்ப கோளாறு: சரிசெய்ய வலியுறுத்தி மறியல்
'இ -- பைலிங்' தொழில்நுட்ப கோளாறு: சரிசெய்ய வலியுறுத்தி மறியல்
ADDED : டிச 16, 2025 06:47 AM

பாரிமுனை: 'இ -- பைலிங், இணையதள தொழில்நுட்ப கோளாறை சீராக்கும் வரை, 'ஆன்லைன்' முறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், நேற்று மறியல் ஈடுபட்டனர். இதனால், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீதிமன்றங்களில், டிசம்பர் முதல் இ -- பைலிங் முறையில், வழக்குகளை பதிவு செய்ய அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இ -- பைலிங் இணையதளத்தில், தொழில்நுட்ப கோளாறு இருந்து வருகிறது. வழக்குகளை பதிவு செய்வதில், சிரமம் ஏற்பட்டுள்ளது.
'தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய வேண்டும். அதுவரை இ -- பைலிங் முறையை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையென்றால், இ -- பைலிங் மற்றும் நேரடியாக பதிவு செய்யும் முறை' என, இரண்டையும் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள், என்.எஸ்.சி., போஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. உயர்நீதிமன்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அரை மணி நேரத்துக்கு பின், மறியல் கைவிடப்பட்டு, அனைவரும் சமாதானமாக கலைந்து சென்றனர்.

