/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளி சிறார் கல்வி சுற்றுலா பயணம்
/
மாற்றுத்திறனாளி சிறார் கல்வி சுற்றுலா பயணம்
ADDED : மார் 21, 2025 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஒரு நாள் இலவச கல்வி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, ஆரம்ப கால பயிற்சி மையத்தில் படிக்கும் பார்வையற்ற, காது கேளாத மற்றும் மனவளர்ச்சி குன்றிய, 6 வயதுக்கு உட்பட 71 சிறுவர்கள், அவர்களது பெற்றோர், பயிற்சி ஆசிரியர்களுடன் நேற்று காலை, மகாபலிபுரத்திற்கு சுற்றுலா சென்றனர்.
இவர்களின் பயணத்தை கே.கே. நகரில் உள்ள, மாற்றுத்திறனாளி் நலத்துறை அலுவலகத்தில், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த ஜகடே கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.