/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்வியாளர் வசந்திதேவியின் உடல் தானம்
/
கல்வியாளர் வசந்திதேவியின் உடல் தானம்
ADDED : ஆக 03, 2025 12:28 AM
சென்னை கல்வியாளர் வசந்திதேவியின் உடல், மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, 87. இவர், மாரடைப்பால் நேற்று முன்தினம் சென்னையில் உயிரிழந்தார். முன்னதாக, வசந்தி தேவி தன் உடலை தானமாக வழங்குவதாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பதிவு செய்திருந்தார்.
அதன்படி, நேற்று காலை வசந்திதேவியின் உடலை, அவருடைய குடும்பத்தினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு துறை தலைவர் டாக்டர் ராஜபிரியாவிடம் ஒப்படைத்தனர். அப்போது, மருத்துவமனை முதல்வர் வியோ டேவிட் உடனிருந்தார்.
முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள், முதலில் ஒரு மனித உடலைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற உடல் தானங்கள், மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு உதவுகிறது. தானமாக வழங்கக்கூடிய உடலை வைத்து மாணவர்களுக்கு, மனித உடல் குறித்து தெளிவாக கற்பிக்கப்படுகிறது என, டாக்டர்கள் தெரிவித்தனர்.