/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர் - புதுச்சேரி, புதுச்சேரி - திருப்பதி ரயில் சனி, ஞாயிறு ரத்து

ADDED : ஏப் 03, 2025 11:52 PM
சென்னை,
'சென்னை எழும்பூர் - புதுச்சேரி, புதுச்சேரி - திருப்பதி ரயில்கள், இனி சனி, ஞாயிறுகளில் இயக்கப்படாது' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை கோட்ட ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ரயில் இயக்கம் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக, எழும்பூர் - புதுச்சேரி, புதுச்சேரி - திருப்பதி ரயில்கள் சனி, ஞாயிறுகளில் இயக்கப்படாது.
அதன்படி, எழும்பூர் - புதுச்சேரி காலை 6:35, புதுச்சேரி - திருப்பதி மாலை 3:00 மணி ரயில்கள், இனி சனிக் கிழமைகளிலும்; திருப்பதி - புதுச்சேரி அதிகாலை 4:00, புதுச்சேரி - எழும்பூர் மாலை 4:00 மணி ரயில்கள், ஞாயிற்று கிழமைகளிலும் இயக்கப்படாது.
மறு அறிவிப்பு வரும் வரை, இந்த உத்தரவு தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பயணியர் அதிருப்தி
சனி, ஞாயிறுகளில் புதுச்சேரி, திருப்பதி செல்ல பயன்படும் ரயில்கள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது, பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
***