/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி அவதி
/
எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி அவதி
எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி அவதி
எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி அவதி
ADDED : செப் 22, 2024 06:39 AM

சென்னை, : எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 35க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 240க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. தினமும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
ஆனால், போதிய அளவில் பயணியருக்கான அடிப்படை வசதிகள் இல்லை. ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்து பயணியர் தகவல் அறிந்து கொள்ளும் வகையில், நுழைவு பகுதிகளில் தகவல் பலகை இல்லாததால், அவதிப்படுகின்றனர்.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
எழும்பூர் ரயில் நிலையத்தில், பயணியர் வருகை அதிகரித்து வருகிறது. ஆனால், போதுமான குடிநீர், கழிப்பிட வசதி, பேட்டரி கார் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
ரயில்களின் புறப்பாடு, வருகை குறித்த தகவல் பெறுவதில் கூட சிரமமாக இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு பகுதியில், டிக்கெட் கவுன்டர்கள் இருக்கும் இடத்திலும் கூட அறிவிப்பு பலகை இல்லை.
தகவல் பெற வேண்டுமென்றால், 3, 4 வது நடைமேடைக்கு செல்ல வேண்டியுள்ளது. அவசர, அவசரமாக ரயிலை பிடிக்க வருவோருக்கு பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. விரைவு ரயில்களின் வருகை, புறப்பாடு குறித்த தகவல் பலகை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'எழும்பூர் ரயில் நிலையம் மேம்பாட்டு திட்டத்தில், பயணியருக்கான அனைத்து வசதிகளும் இடம் பெறும். தற்போது, 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளோடு அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்' என்றனர்.