/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டவர்ஸ் கிளப் ஓபன் ஸ்னுாக்கர் எட்டு வீரர்கள் காலிறுதிக்கு தகுதி (படம் வரும்)
/
டவர்ஸ் கிளப் ஓபன் ஸ்னுாக்கர் எட்டு வீரர்கள் காலிறுதிக்கு தகுதி (படம் வரும்)
டவர்ஸ் கிளப் ஓபன் ஸ்னுாக்கர் எட்டு வீரர்கள் காலிறுதிக்கு தகுதி (படம் வரும்)
டவர்ஸ் கிளப் ஓபன் ஸ்னுாக்கர் எட்டு வீரர்கள் காலிறுதிக்கு தகுதி (படம் வரும்)
ADDED : ஏப் 19, 2025 11:45 PM
சென்னை, அண்ணா நகர் டவர் கிளப் சார்பில், இரண்டாவது டவர்ஸ் கிளப் ஓபன் ஸ்னுாக்கர் போட்டி, அண்ணா நகரில் உள்ள கிளப்பில், கடந்த 14ம் தேதி துவங்கியது.
போட்டியில், தமிழகத்தை சேர்ந்த முன்னணி வீரர் - வீராங்கனையர் உட்பட, நாடு முழுதும் இருந்து, 128 பேர் உற்சாகமாக பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 128 பேரும், ஐந்து 'பிரேம்கள்' வீதம் மோதி, 32 வீரர்கள் முதன்மை சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
இவர்களுடன், நேரடியாக தேர்வான இந்தியாவின் முன்னணி வீரர்கள் 32 பேரும், ஏழு 'பிரேம்கள்' வீதம் நாக் அவுட் முறையில் மோதினர்.
அதன்படி, நேற்று வரை நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பெட்ரோலியம் விளையாட்டு வாரிய வீரர் ஆதித்யா மேத்தா, 4 - 0 என்ற கணக்கில், அதே வாரிய வீரரான மனன் சந்திராவை தோற்கடித்தார்.
அதேபோல் , ரயில்வே வீரர் பாண்டு ரங்கய்யா, 4 - 3 என்ற கணக்கில், கர்நாடகாவின் அக்மல் ஹுசைனையும், டில்லி வீரர் சந்தீப் குலாட்டி, 4 - 0 என்ற கணக்கில் ரயில்வே வீரர் திலீப் குமாரையும் தோற்கடித்தனர்.
உ.பி., வீரர் பராஸ் குப்தா, 4 - 2 என்ற கணக்கில், ரயில்வே வீரர் பைசல் கானையும், ஹரியானாவின் திக்விஜய் காடியன், 4 - 2 என்ற கணக்கில் ரயில்வே வீரர் கமல் சாவ்லாவையும் வீழ்த்தினர்.
பெட்ரோலியம் விளையாட்டு வாரிய வீரர் கிருஷ்ணா, தெலுங்காவின் ஹிமான்ஷு ஜெயினையும், பெட்ரோலியம் வாரிய வீரர் லக் ஷ்மன் ராவத், 4 - 1 என்ற கணக்கில், மற்றொரு பெட்ரோலியம் வாரிய வீரர் ஷாபாஸ் அடில் கானையும் வீழ்த்தி வெற்றி பெற்றனர். இப்போட்டியில் வென்ற எட்டு பேரும், காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.