/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் இருதரப்பு அடிதடி எட்டு மாணவர்கள் சிக்கினர்
/
சாலையில் இருதரப்பு அடிதடி எட்டு மாணவர்கள் சிக்கினர்
சாலையில் இருதரப்பு அடிதடி எட்டு மாணவர்கள் சிக்கினர்
சாலையில் இருதரப்பு அடிதடி எட்டு மாணவர்கள் சிக்கினர்
ADDED : ஆக 09, 2025 12:16 AM
சென்னை, சென்னையில், இந்த கல்வி ஆண்டுக்காக கல்லுாரி திறந்த நாள் முதல், மாநகர பேருந்துகளிலும், ரயில்களிலும், பொது இடங்களிலும் பயங்கர ஆயுதங்களுடன், மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில், அண்ணா சாலை காயிதே மில்லத் கல்லுாரி அருகே, நந்தனம் கல்லுாரி மாணவர்களிடையே, நேற்று மதியம் திடீரென மோதல் ஏற்பட்டது. கைகளாலும், குடிநீர் வாட்டர் பாட்டில்களாலும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சென்ற சிந்தாதிரிப்பேட்டை போலீசார், அடிதடியில் ஈடுபட்ட அரவிந்த், 19, உட்பட எட்டு மாணவர்களை பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று, தாக்கிக் கொண்டது குறித்து விசாரித்து வருகின்றனர்.