ADDED : நவ 14, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டூர்புரம்: சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்புக்கு காரணமான பொறியாளரை அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 60. இவர், நேற்று மதியம், இருசக்கர வாகனத்தில், நந்தனம் சேமியர்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த பூந்தமல்லியைச் சேர்ந்த ஐ.டி., ஊழியரான சுரேஷ், 28, என்பவரின் வாகனம் மோதியதில், குணசேகரன் நிலை தடுமாறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து ஏற்படுத்திய, சுரேஷை கைது செய்த போலீசார், வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

